Wednesday, February 27, 2013
குட்டிக்கதை:
குட்டிக்கதை:
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும்,
கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
யோசனை
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்...
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி, இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி...
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து...
கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள் ஒருத்தி செத்து விடுவாள். அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு...!
சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்...!
பேராசை
வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது.
எறும்புகள் ஓடோடி வந்தன.
தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன
அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது.
தும்பிக்கையைத் தரையில் வைத்து உறிஞ்சியது.
சர்க்கரையுடன், மண், கல், பாலித்தீன் பைகள் எல்லாம் உள்ளே போயின.
அவதிப்பட்டது.
அளவுக்கு மேலான ஆசை அவதியையே தரும்.
நூறு சதவீதம்
அய்யாசாமி மதிப்பு வாய்ந்த ஒரு நாட்டின் அமைச்சர்.
ஒரு முறை பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.
அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து, அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.
அதற்கு அந்த பக்கத்து நாட்டு அமைச்சர், ஜன்னலைத் திறந்து காட்டி ஒரு பாலத்தைக் காட்டினார்.
"அதோ ஒரு பாலம் இருக்கிறதே... அதை நான் தான் கட்டினேன்... அதில் தனக்கு பத்து சதவீதம் கிடைத்தது... அதில்தான் இந்த வசதி வாய்ப்புகளெல்லாம்"
விருந்து முடிந்து சொந்த நாட்டுக்கு அய்யாசாமி வந்தபின், சுமார் ஒரு வருடத்திற்குப் பின், பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.
அய்யாசாமி கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார் பக்கத்து நாட்டு அமைச்சர். அவர் முகக் குறிப்பறிந்த அய்யாசாமி ஒரு ஜன்னலைத் திறந்து,
"அதோ பாலம் தெரிகிறதா?" எனக் கேட்டார்.
"கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?" எனச் சொன்னார் பக்கத்து நாட்டு அமைச்சர்.
அதற்கு அய்யாசாமி சிரித்துக் கொண்டேசொன்னார்,
"ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்"
யார் அந்த நல்லவர்கள் ?
# படித்ததில் பிடித்தது #
யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?
அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.
கோபப்படமாட்டார்கள்.
மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.
புகழுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.
பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.
"நீதிக்கதை"
"நீதிக்கதை"
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்
நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.
ஐயோ....., ஐயோ... சின்னபுள்ள தனமால்ல இருக்கு
ஐயோ....., ஐயோ... சின்னபுள்ள தனமால்ல இருக்கு
-------------------------------------------------------------------
ஒரு வயசு பையனையும்,
ஒரு வயசு பொண்ணையும்
ஒரு இருட்டு ரூம்ல விட்டா என்ன
பண்ணுவாங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அழுவாங்க"
பின்ன ஒரு வயசு தான ஆகுது.
பாவம்ல!!!
Tuesday, February 26, 2013
காதல்
இத்தனை பொண்ணுங்களுக்கு
மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய்…எப்ப டிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காத குறையாக
விரட்டி விட்டதை….:-)
ஏமாற்றம்
ஏமாற்றம்
அய்யாசாமி ஒரு கிராமத்து ஆசாமி.
ஒரு முறை சென்னை வந்திருந்தபோது கட்டிடம் அருகே பேருந்துக்காக ஒரு மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த ஒரு முரட்டுத்தனமான ஆசாமி,
"இங்கே என்ன பண்ணிகிட்டிருக்க?" என்று அய்யாசாமியைப் பார்த்து கேட்டான்.
"இல்லை...இந்த கட்டிடம் இவ்வளவு உயரமா இருக்கே அதான் பார்த்துகிட்டிருக்கேன்"
"அப்படியேல்லாம் சும்மா பார்க்கக்கூடாது... நீ எத்தனை மாடி பார்த்தியோ அத்தனை மாடிக்கும் ஒரு மாடிக்கு 15 ரூபாய் விதம் எனக்கு கொடு"
அய்யாசாமியோ மறுபேச்சு பேசாமால்,
"நான் 4வது மாடி வரைதான் பார்த்தேன்" என்று 1 மாடிக்கு 15 விதம் 60 ரூபாயைக் கொடுக்க, அவன் சென்று விட்டான்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவன் அய்யாசாமியிடம் வந்து சொன்னார்,
"அவன் உங்களை ஏமாற்றி பணம் வாங்கி செல்கிறான்... ஏமாந்துவிட்டீர்களே" என்றான்.
அதற்கு அய்யாசாமி சொன்னார்,
"நான் இல்லை... அவன் தான் என்னிடம் ஏமாந்து செல்கிறான்.
வந்தவன் புரியாமல் விழிக்க,
"நான் 10 மாடி வரை பார்த்தேன்... ஆனால் 4 மாடி பார்த்ததாக அவனை ஏமற்றிவிட்டேன்" என்றார் அய்யாசாமி
வெயிட்
என்னடி இவ்வளவு வெயிட்டான
சேலையை வாங்கி வந்திருக்கே?
உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது
நான்தானே..?
சனியனே! துவைக்கப்
போறது நான்டீ..!
அழகு…!!
நான் அழகா இல்லை
என் ட்ரெஸ் அழகா என
கேட்கிறாய்… உனக்கு பொய்
சொன்னா பிடிக்காது எனத்
தெரிந்தும் சொல்கிறேன்…
நீதாண்டி செல்லம் அழகு…!!
அடி
மொக்க figure ta போய் phone number கேட்டவனும் ,
facebook வந்துட்டு lifela உருப்படனும்னு நெனைச்சவனும் ..
.
.
. .
.
.
.
.
.
அடிபட்ட அப்றம் தான் திருந்துவாங்க.......
Monday, February 25, 2013
பர்த்டே
என் பர்த்டே க்கு என்னடா
தரப்போறே என உரிமையோடு
நீ கேட்கும் போதெல்லாம்
உனக்கு என்னையே தர
ஆசையாகத்தான் இருக்கிறது…
ஆனாலும் உன் ஹைஹீல்ஸ்சை
நினைத்தால் தான்
யோசனையாக இருக்கிறது…!!?
' அம்மா '
அடிப்பாவி மகளே...
எவனையோ லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்து சொல்லுறியே...
கொஞ்சம் கூட ' அம்மா ' ன்னு ஒரு மரியாதை இல்லாம...
"சும்மா கத்தாதேம்மா...
இன்னும் ஆறு மாசத்துல நானும் தான் அம்மா ஆகப்போறேன்!!..."
அழகு நிலையம்
பெண்கள் அழகு நிலையம் ஒன்றிலிருந்து பெண்கள் வெளியே வரும்போதெல்லாம் சில இளைஞர்கள் கேலி செய்வதாக அதன் உரிமையாளருக்கு புகார் போனது.
அவர் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை. அந்த இளைஞர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கவுமில்லை.
தன் அழகுநிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய பலகை வைத்தார்: பேசும் பலகைகள்
“இங்கிருந்து போகும் பெண்களை கேலி செய்யாதீர்கள்.
அவர் உங்கள் பாட்டியாகக்கூட இருக்கலாம். அடையாளம் தெரியாமல் அவசரப்படாதீர்கள்”.
ப்ரெண்டு
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா
.
.
.
.
.
.
.
.
.
மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..
பெண் பார்க்க வந்த இடத்தில்...
பெண் பார்க்க வந்த இடத்தில்...
''....'இந்த பெண்ணை வேண்டாம் '.....ணு ஒடறானே அப்படி தனியாய் அழைச்சிட்டு போய் அவ என்ன கேள்வி பையன்கிட்டே கேட்டாளாம்...
''அடி வாங்கும் போதெல்லாம் 'ஐயோ.'..ன்னு... கத்துவீங்களா ..
'அம்மா'..ன்னு கத்துவீங்களா,,, கேட்டிருக்கா..' '
Sunday, February 24, 2013
வேட்டை
அய்யாசாமி: ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.
நண்பர் : ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?
அய்யாசாமி : எப்படி இருக்கும்? எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!
புலம்பல்
கணவன்:- நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!
மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!
மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!
.பார்வை நேரம்
பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்....?"
"தெரியுமே...ஏன் கேட்கறீங்க..... ?"
"இல்ல...பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்க ளே... அதான் கேட்டேன்.!"
உன் வாழ்க்கை உன் கையில்...
இறந்து போன மீன்கள் தான் தண்ணீரின்
திசையிலே செல்லும்..
உயிருள்ள மீன்கள்
தண்ணீரை எதிர்த்து தான் செல்லும்..
உனக்கென ஒரு வழியை உருவாக்கு..
உன் வாழ்க்கை உன் கையில்...
Saturday, February 23, 2013
அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்
காதலிச்சிட்டு அல்லது கல்யாணம் பண்ணிட்டு இந்த பொம்பளைங்க கூட போராடும் சில அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை
ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )
3.. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.....
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை
ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )
3.. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.....
முயற்சி
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.
கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.
வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
எறும்புக்கும் யானைக்கும் பசி ஒன்றுதான்,
ஆனால்
எறும்பின் உணவு யானைக்கு பற்றாது,
யானையின் உணவு எறும்புக்கு சேராது,
அதனால்
தேவைக்கு மட்டும் ஆசைப்படு!!
ராப்பிச்சை
நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."
"அப்படியா,என்ன சொன்னாங்க!?"
"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,
ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"
அருமையான காமெடி
அருமையான காமெடி
------------------------------
Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ?
Student: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க!
Teacher: டே உன் கிட்ட 2 இட்லி இருக்குனு வச்சிக்கோ.
நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?
Student: சட்னி.
Teacher: ???
நம்ம பையனுகள் சிங்கம்ல
நம்ம பையனுகள் சிங்கம்ல
--------------------------------------
ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.
கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.
10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.
மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.
அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..
கடைக்காரர் பாடு..?????
பிச்சைக்காரன்
நம்ம அய்யாசாமிக்கு திருமணமான புதிது.
எப்பொழுது கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பிச்சைக்காரர் ஒருவருக்கு காசு போடுவது அய்யாசாமியின் வழக்கம்.
அன்றும் அப்படித்தான். இவர் ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட, அவன் கேட்டான்.
"ஏன் சாமி, முன்னாள் 15 ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள். அதன் பின் 10 ரூபாய் பிச்சை போட்டீர்கள். இன்று வெறும் 5 ரூபாய் போடுகிறீர்களே? அது ஏன்?"
அய்யாசாமி சொன்னார்
"திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன். அப்போது 15 ரூபாய் போட்டேன்.
திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது 10 ரூபாய் போட்டேன்.
நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா? அதனால்தான் 5 ரூபாய் போடுகிறேன்."
அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான்,
"ஏன் சாமி.. அப்படின்னா என் காசை வைத்துத்தான் நீங்கள் குடும்பம் நடத்துகிறீர்களா?...உங்களுக்கு வெட்கமாக இல்லையா?"
மனைவி : கணவன்
மனைவி (கணவனிடம்): ஏங்க....நீங்க இன்னிக்கு பேசப்போற கூட்டத்துக்கு நான் வரட்டுமா?
கணவன் :வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே... கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?
கணவன்:மனைவி
கணவன்: இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி: ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்: அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி: இல்லே, நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.
Friday, February 22, 2013
ஓ மை காட்!
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை
அம்மாவின் பாசம்
கடைசி தோசை
சாப்பிடும் போது
சட்னியை வேண்டும்
என்றே அதிகமாக
வைத்து சட்னியை
காலி செய்ய சொல்லி
இன்னொரு தோசை
வைக்கிறது தான்
.
.
.
.
அம்மாவின் பாசம்
பிச்சைக்காரன்
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன். என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம்
உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை
பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.
காதல் கல்யாணம்
நம்ம அய்யாசாமியும், ஒரு பெண்ணும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டனர்.
ஒரு நாள் இரவில்..
“ஏங்க நம்மள நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”
“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”
“என்னங்க இப்படி பேசுறீங்க..!?”
“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம். எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”
“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”
“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி....!!!! ”
“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நீங்கதானே..! ”
“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”
“நம்ம குடும்பத்தில உள்ளவங்க ,நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”
“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”
“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளை பெத்தாச்சி.. இப்போ.. இன்னும் ஒண்ணா....???!!!”
ஃபிகர் Vs நண்பன்
ஃபிகர் ஐபோன் மாதிரி கலரா இருந்தாலும் விழுந்தா உடைஞ்சிடும்!!!
நண்பன் நோக்கியா 1100 மாதிரி தூக்கிவீசினாலும் , உஹும்ம், ஒன்னும் பண்ண முடியாது !!!
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் சாதனை புரிந்த ஹென்றிபோர்டு ஒரு முறை...
"நீங்கள் பெரிய ஜீனியஸ்" என்று புகழப்பட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
"அதிமேதவித்தனமாவது, மண்ணாங்கட்டியாவது! உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம் தான் என்னிடமும் இருக்கிறது. விடாமுயற்ச்சியுடன் உழைத்து, நான் அதைப் பயண்படுத்தினேன் அவ்வளவு தான்!" என்றார்.
கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படதவரை, யாருக்கும் உபயோகம் இல்லை. வீணாகி மக்கி குப்பைக்கு தான் போய் சேரும்.
திறமைகளைத் தேக்கி வைக்காதீர்கள், அவற்றைப் பயண்படுத்தி கொண்டே இருந்தால் தான் பலன்!
புதிய வாய்ப்புகளை திறமையோடு எதிர்கொள்ள பழகினால் தான், உங்கள் திறமையும் முழுதாக பரிமளிக்கும். அது உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே இருக்கும்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
எமது சிரிப்பூக்கள் பக்கமானது இன்று தனது 200 வது நேயரை தன்னகத்தே உள்வாங்கி வெற்றிநடை போடுகிறது.
எமது சிரிப்பூக்களின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து சிரிக்கத் தெரிந்த உள்ளங்களுக்கும் சிரிப்பூக்களின் இதய பூர்வ நன்றிகள்.
எமது சிரிப்பூக்கள் பக்கத்திற்கு தன்னால் முடிந்தளவு நகைச்சுவகளைப் பகிர்ந்து கொண்ட கிகனெட் உரிமையாளர் பாஹிர்,
வைத்தியர் ஹாரீஸ், எமது பக்கத்தின் வளர்ச்சிக்கு பின்னூட்டல்களை வழங்கிய வைத்தியர் அகமட் றிஷி, நபீஸ் ஆதம்பாவா அவர்கள் அனைவரையும் சிரிப்பூக்கள் இந்த இடத்தில் நினைவு கூறுகி'றது.
Thursday, February 21, 2013
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
ஒவ்வொரு ஆண்மகனும்
ஆலமர விழுது போல...,
யாரோ ஒருத்தி
ஊஞ்சல் ஆடி போயிருப்பா...!
மப்பு
டேய் மச்சான்... இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா''
""டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க... நான் உன் ஃப்ரண்டு இல்லடா... உன் அப்பன்''
வில்லத்தனம்
சிரிப்பூக்கள் : ஏன்டா... நீ கூட லைக் போடாத அளவுக்கு என் அப்டேட் அவ்ளோ மொக்கயாவா இருக்கு...?
என் ரசிகன்: இல்ல மச்சி... உன் அப்டேட் நல்லாத்தான் இருக்கு... ஆனா உன் அப்டேட் க்கு நான் லைக் போட்டு... அத பார்த்து நான் கஷ்டப்பட்டு என் லிஸ்ட்ல சேர்த்த பொண்ணுங்க உனக்கு frnd req குடுத்துட்டா ? ? ?
என்னா ஒரு வில்லத்தனம் !!!!
நீயெல்லாம் நல்ல வருவ டா நல்ல வருவ!!!
புத்திசாதுரியம்
புத்திசாதுரியம்
---------------------
அய்யாசாமி ஒருவர் ஒரு தவறு செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே அறையில் ஒரு திருடனும் அடைக்கப்பட்டிருந்தான். திருடன் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டான். இதை அறிந்த அய்யாசாமியும் தன்னையும் சேர்த்துக் கொள்ள சொன்னார். சிறிது தயக்கத்துடன் அவன் ஒத்துக் கொண்டான்.
நள்ளிரவில் திருடன் மெதுவாக சிறையின் பின்புறம் இருளான ஒரு பகுதிக்கு சென்று ஒரு பெரிய கயிறை சுவரின் மீது போட்டு அதன் மீது ஏறலானான். அய்யாசாமியும் பின் தொடர்ந்தார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த வார்டன் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று உஷாராகி,
"யாரது அங்கே?"என்று சப்தம் கொடுத்தார்.
திருடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,
"மியாவ்"என்று கத்தியவாறு சுவற்றிலிருந்து வெளியே குதித்து விட்டான்.
வார்டனும் பூனை தான் திறிகிறது என்று எண்ணி திரும்ப நடந்தார். இப்போது அய்யாசாமி கயிற்றின் மீது ஏறவே மீண்டும் சப்தம் கேட்கிறதே என்று உணர்ந்து வார்டன் திரும்ப வந்து,
"என்ன சப்தம்? யாரது?"என்று கத்தினார்.
அய்யாசாமி புத்திசாலித்தனமாக குரல் கொடுத்தார்,
"இது இரண்டாவது பூனை!"
பூனை
அய்யாசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.
அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருந்தது.
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.
சிறிது நேரம் கழித்து அய்யாசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார்,
"உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?"
"ஆம்" என்று மனைவி சொல்ல
அய்யாசாமி சொன்னார்,
"போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை"
Tuesday, February 19, 2013
அரசியல்வாதிகள்
ஒரு
தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர்
இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து
விபத்து குறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை
கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.
‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’
‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள்.
ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய்
சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’
பெரிய பொய்
ஆசிரியர் : எதுக்குடா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?
சுப்பு : ஒண்ணுமில்ல டீச்சர், கீழே இந்தப் பத்து ரூபா கெடந்ததை நாங்க
ரெண்டு பேருமே பார்த்தோம். ரெண்டு பேர்ல யார் பெரிய பொய் சொல்றாங்களோ
அவங்களுக்குத்தான் இது சொந்தம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் மாத்தி
மாத்திப் பொய் சொல்லிட்டு இருந்தோம். அதில யார் சொன்னது பெரிய பொய்
அப்படீங்கிறதிலதான் எங்களுக்குள்ளே சண்டை.
ஆசிரியர் : ச்சே! உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?
சுப்பு : ப்பா! டீச்சர், இந்த பத்து ரூபா கண்டிப்பா உங்களுக்குத்தான்.
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
அச்சுவும், சச்சுவும் வேலை தேடித் தேடி அலுத்துப்போனார்கள். இருவரும் உள்ளூர் நூலகத்தில் சந்தித்தபோது, சொந்தமா நகல் (ஜெராக்ஸ்) எடுக்கும் கடை வைப்பது பற்றியும் . நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பங்குதாரா சேர்த்துக்கறேன்” என்றும் கூறினான் அச்சு.
சரி என்றான் சச்சு.
அச்சு ஆர்வத்துடன் ஒரு வார இதழை எடுத்து அதில் வந்திருந்த நகல் இயந்திர (ஜெராக்ஸ் மிஷின்) விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தைக் காட்டினான்.
அந்தக் கம்பெனியின் விலாசத்தை எழுத பேனாவை எடுத்தான் சச்சு.
அதற்குள் அச்சு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விளம்பரம் வந்த பக்கத்தை அப்படியே கிழித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
”வா, வெளியே போய் பேசலாம்” என்றான் அச்சு
சச்சுக்குவுக்கு மனசு உறுத்தியது. பலர் படிக்க வேண்டிய நூலகப் புத்தகத்தில் இருந்து அக்கறை இன்றி கிழிக்கிறானே, இவனை நம்பி பணம் போட்டு பங்குதாரராய் சேர்ந்தால்…?
வெளியே வந்ததும், ”மன்னிக்கவும், நான் பங்குதாரராய் சேரலை” என்றான் சச்சு.
கவனிக்க
அச்சுவை போல் நூலகத்தில் உள்ள நூல்களில் ஏடுகளை கிழிக்காதீர்: இன்று உங்களுக்கு பயன்பட்டது போல் வரும் காலங்களில் எல்லோருக்கும் பயன்பட தேவை அந்த புத்தகங்கள்.
இளவயது
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம
அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை
எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம
வீட்டுக்குத்தான்”
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.
மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு
“”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?”
என்று கேட்டார்.
பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம்
ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’
ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்
இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்
தயக்கம்
இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார் நம்ம அய்யாசாமி.
"சார்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம் ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான் தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!" என்றான் போர்டர்.
"வேணாம்பா!"
"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"
"இல்லை வேணாம்பா"
"ஒருவேளை என்னால தூக்க முடியாதுன்னு யோசிக்கிறீங்களோ... நான் இதையெல்லாம் ரொம்ப சுலபமா தூக்குவேன் சார். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
"காசுக்காக நான் யோசிக்கல"
"பின்னே"
"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"
Monday, February 18, 2013
'பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி.
''பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி... யார்?''
''சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால்,
அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி.
சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.
அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!''
பிசினஸ் ட்ரிக்ஸ்
பிசினஸ் ட்ரிக்ஸ்.-
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.
ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).
சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)
இலங்கை அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.
அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இலங்கை அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.
டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்.
கசப்பான உண்மை..
இது ஒரு கசப்பான உண்மை..
****************************
பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள்.
இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள்.
மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள்.
படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர்.
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாகவும் ஆகிறார்கள்.எல்லாத் தரப்பினரும் அவர்கள் சொல்லும் வழியில் செல்கிறார்கள்.
கிரிமினல்ஸ்......
கிரிமினல்ஸ்......
------------------
ஒரு பள்ளியில்,
பிள்ளைகள் அனைவரையும் ஒரு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள். அதில் நம்ம அய்யாசாமியும் ஒருவன்.
அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரைப் பார்த்து அய்யாசாமி,
"அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க" என்றான்.
"இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்
அய்யாசாமி இன்ஸ்பெக்டரை கேட்டான்,
"அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே...ஏன் பிடிக்காம விட்டீங்க?"
வளரும் பயிர்
வளரும் பயிர்
-------------------------
அய்யாசாமி தனது அம்மாவிடம் பொங்கலுக்கு ஒரு சைக்கிள் கேட்டான்.
"நீ இன்னும் வளர வேண்டும்" என்று சொல்லி விட்டாள் அம்மா.
எனவே அய்யாசாமி சிவனுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
"அன்புள்ள சிவா, நான் மிகவும் நல்ல ரொம்ப நல்ல பையன்' எனவே எனக்கு ஒரு சைக்கிள் கொடுக்கவும் ..."
இதில் திருப்தி ஏற்படாத அய்யாசாமி அதைக் கிழித்துப் போட்டு விட்டு மீண்டும் எழுதினான்.
"அன்புள்ள சிவா, நான் அவ்வப்போது கொஞ்சம் தப்பு பண்ணி இருக்கிறேன். ஆனால் நான் நல்ல பையன் தான் ; எனவே எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்"
இதிலும் திருப்தி ஏற்படாமல் அய்யாசாமி அதைக் கிழித்துப் போட்டு விட்டான்.
அப்போது வீட்டில் முருகனின் பொம்மை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் போய் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து பரண் மீது வைத்து விட்டு வந்து எழுதினான்:
"அன்புள்ள சிவா, நீ உன் மகனை உயிரோடு பார்க்கவேண்டுமென்றால் உடனே எனக்கு சைக்கிள் வாங்கி அனுப்பி வைக்கவும்"
Sunday, February 17, 2013
இயல்பு
ஊருக்கு
ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள்
யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப்
புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி.
பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய்
வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை
நடத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி
வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள்
குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை
கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று
விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.
ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம்
இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது,
துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல்
செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.
யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும்
போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த
கதையையெல்லாம் கூறி அழுதது.
யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள்
பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன்.
பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே"
என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.
நீதி: உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாதீர்கள்!
திட்டமிட்ட வாழ்க்கை
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,
5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.
அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.
ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.
போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.
இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்..!!
general knowledge
நம்மிடம்
உள்ள புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழக்கமாக நாம் பெரிதாக்க
முயற்சி செய்கையில், அதனுடைய resolution பாதிக்கப்படுவது இயல்பு. சில
சமயங்களில் நமது மொபைல் போன்களில் எடுக்கும் படங்களை பெரிதாக்கி பிரிண்ட்
செய்யும் பொழுது படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கலாம்.
நமக்கு தேவையான அளவில் படங்களை பெரிதாக்க ஒரு இலவச மென்பொருள்
SmillaEnlarger.இந்த மென் பொருள் கருவிக்கு installation தேவையில்லை.
தரவிறக்கி unzip செய்தபிறகு SmillaEnlarger ஃபோல்டருக்குள் உள்ள
SmillaEnlarger.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது.
படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை இந்த கருவியை பயன் படுத்தி எப்படி பெரிதாக்குவது என்று பார்ப்போம்.
SmillaEnlarger -இல் இந்த கோப்பை திறந்த பிறகு, இடது புறமுள்ள Output
Dimensions பகுதிக்கு சென்று தேவையான அளவு - மாற்றங்களை தேர்வு செய்து
கொள்ளலாம்.
இப்பொழுது cropping பேனில் படத்தில் ஒரு சிறிய பகுதியை தேர்வு செய்தவுடன்,
Thumbnail preview -இல் அந்த சிறிய பகுதி பெரிதாக, நாம் கொடுத்துள்ள அளவிற்கு தெளிவாக தெரிவதை கவனிக்கலாம்.
Enlarger Parameters பகுதியில் sharp, paint போன்ற வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் பல புகைப்படங்களை ஒரே சமயத்தில் கையாளும் வசதியும் உள்ளது.
Download link..
http://sourceforge.net/projects/imageenlarger/
Friday, February 15, 2013
புரிஞ்சா சரி
புரிஞ்சா சரி
----------------
மிருக காட்சி சாலையில் இருந்த இரண்டு சிங்கங்கள் தப்பித்தன. ஒன்று உடனே பிடிபட்டது. இரண்டாவது பல மாதங்களுக்குப் பின் பிடிபட்டு மறுபடியும் ஜூவில் விடப்பட்டது.
முதலாவது சிங்கம் கேட்டது, "இவ்வளவு நாளா எங்க ஒளிஞ்சிருந்த.. யாராலயும் கண்டுபிடிக்கவே முடியலையே..."
இரண்டாவது சிங்கம் : "டாஸ்மாகில்"
முதலாவது சிங்கம் : "யாருமே பாக்கலையா"
முதலாவது சிங்கம் : "குடிகாரனுகளைத் தான் தின்னுகிட்டு இருந்தேன் இத்தனை நாளா.. யாருமே கண்டுக்கல.. நேத்து தான் தவறிப்போய் "சைட் டிஷ்" சமைக்கிறவனை தின்னுட்டேன். எல்லோருமே தேட ஆரம்பிச்சிட்டாங்க.."
மிருக டாக்டர்
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடம்மைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு உதாரணம் வச்சாளாம் மனைவி..!
வாழ்க்கை
வேலையை எல்லாம் முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார் அப்பா...
அவருடைய 5 வயது மகன், அவருக்காக வாசலில் காத்திருந்தான்..
மகன் : அப்பா, உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா ?
அப்பா : கேளு..
மகன் : நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ சம்பாதிப்பீங்க?
அப்பா : அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போற..
மகன் : சொல்லுங்கப்பா..
அப்பா : 100 ரூபாய்
மகன் : அப்போ, எனக்கு ஒரு 50 ரூபாய் தருவீங்களா..
அப்பா : (கோபத்தில்) உன் ரூம்ல போய் தூங்கு[மகனும் கோபத்தில் தூங்க சென்றான்]
கொஞ்ச நேரம் கழித்து தன் தவறை உணர்ந்த தந்தை மகனை பார்க்க செல்கிறார்...
அப்பா : மன்னிச்சிக்கோ.. வேலைல இருந்த கோபத்தை உன் மீது காட்டிவிட்டேன்.. இந்த நீ கேட்ட 50 ரூபாய்...
மகன் : நன்றி அப்பா...
மகன் தன் தலைகாணியின் அடியில் இருந்த சில ரூபாய்களை எடுத்து... அப்பா,
இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு, உங்கள நான் ஒரு மணி நேரத்துக்கு
வாங்கிக்கிறேன்,.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்க,, இரவு சாப்பாட உங்க
கூட சேர்ந்து சாப்டனும்'னு ஆசைபடறேன்...!
உங்கள் அன்பானவர்களிடம் சிறது நேரம் ஒதுக்குங்கள், உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை மிகவும் அற்புதமானதாகும்...!
செருப்படி
டேய் மாப்பள மலேசியா போவலாம்னு நினைக்கிறேன் எவ்ளவு செலவாகும்டா
நெனைக்கிறத்துக்குலாம் காசு கிடையாது ப்ரீ தான் என்ஜாய் பண்ணு மாமு என்ஜாய் பண்ணு
இன்னிக்கி இவன் போதைக்கு நாம்மா தான் ஊருகாய்யா?? முடியல
### சிரிப்பூக்களுக்கே செருப்படினா, எதிர்க்கட்சிக்காரன் உயிரோட இருப்பான்னு நெனைக்கிற நீயி??!!!
நான் ரசித்த கவிதை
நான் ரசித்த கவிதை
'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை
வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று
பச்ச மண்ணு
ராமு: ஏன் பாக்குர பஸ்ஸையெல்லாம் ஓடுமா ஓடுமான்னு கேட்டுகிட்டே இருக்க?
சோமு: ஓடுர பஸ்ல ஏறக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க
பச்ச மண்ணு
ஈ மெயிலா?
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை
--------------------------------------------------------------
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக,
ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,
‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,
‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.
Thursday, February 14, 2013
கடன்
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில்
இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு சொன்ன..
நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு
எதிர்கேள்வி கேக்குறான்
தலைமை ஆசிரியர் :?!?!
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
-----------------------------
திருந்துரவன் மன்னிப்பு கேட்பான்,
ஆனால்,
மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்பவன் திருந்த மாட்டன்.
ஆணாதிக்கவாதி
ஒரு வியாபாரி இரண்டு ஆண்டுகள் அயல்நாட்டுப் பயணத்தில் அயராது உழைத்து ஏகப்பட்ட பணத்துடன் வீடு திரும்புகிறார்.
அங்கு அவரது மனைவியின் கையில் அழகான பிறந்த குழந்தை இருந்தது.
வியாபாரி ஏற்கனவே சந்தேகப்பிராணி! இதைப்பார்த்தவுடன் ஏகப்பட்ட கடுப்பானார்.
இந்தக் குழந்தையின் தந்தையைக் கண்டுபிடித்து பழிவாங்க அவரது மனம் துடித்தது.
இந்தக் குழந்தையின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்லு என் நண்பன் பாண்டியா?
மனைவி அழுதுகொண்டே இல்லை
பின்ன யாரு எப்பப் பாரு என் கூடவே சுத்துவோனே மாணிக்கமா?
இல்லை! என்றால் விசும்பியபடியே!
பின்ன யாரு? இப்ப சொல்லப்போறியா இல்லியா?
நீங்க என்ன ஒரு ஆணாதிக்கவாதி! உங்க பிரெண்டாத்தான் இருக்கணுமா? ஏன் என் பிரெண்டா இருக்கக்கூடாதா?
Wednesday, February 13, 2013
நாங்க அப்பவே அப்பிடி... இப்ப சொல்லவா வேணும்???
நாங்க அப்பவே அப்பிடி... இப்ப சொல்லவா வேணும்???
A' 'B'க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
'C' 'D'போட்டு பார்க்கும்..
'E' 'F' க்கு உடம்பு சரி இல்லைன்னா எங்க போகும்?
'G' 'H'க்கு தான் போகும்..
'I' 'J' 'K' L'க்கு எதிரி யாரு?
'M N' (எமன் )தான்..
'O' 'P' ரேஷன் கடைக்கு போன எங்க நிக்கும்?
'Q'ல தான் நிக்கும்..
'R' 'S'க்கு தலை வலிச்சா?
'T'குடிக்கும்..
'U''V''W''X''Y'க்கு பறக்கணும் என்றால் என்ன செய்யும்?
'Z' (jet)ல போகும்..
கள்ள காதல்
ஒருத்தன் பைக்ல அவன் பிகர
பின்னால
உக்காரவச்சி கிட்டு வேகமா போகும்
போது....
அவன நாம ஓவர் டேக்
பண்ணிட்டு. அந்த பிகர
பாத்தா அந்த பிகர் ஒரு லுக் விடும்
பாருங்க....ஐயோ. !!!!
அப்படியே உடம்பெல்லாம்
ஏதோ ..பண்ணும்.
#இதற்கு பெயர் தான் கள்ள
காதலோ??? — :o :o :o
"LOVERS DAY"
GIRL1: Last Year "LOVERS DAY" supera கொண்டாடினது தப்பா போச்சுடி!
GRL2: ஏண்டி?
GRL1: இந்த வருஷம் "MOTHERS DAY" கொண்டாட வச்சுட்டான் பாவி.
Wish You Advance HapPy Lover's Day...
ஆசிரியர்கள் என் தெய்வங்கள்
ஆசிரியர்கள் என் தெய்வங்கள்"
------------------------------------------
நாங்க அசந்து தூங்குனாலும், அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!
கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே!
என் தெய்வமே!!
'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா ஸ்கூல விட்டே வெளிய போய் கிறவுண்ட்ல இருப்போமே தெய்வமே!
என் தெய்வமே!!
உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே!
என் தெய்வமே!!
எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!
இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி, எக்சாம் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே! என் தெய்வமே!!
நீங்க இத்தனை பண்ணினாலும், என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுத்திருப்போமா தெய்வமே!
யோசி என் தெய்வமே!!
இப்ப பதில் சொல்லுங்க... அவ்வ்வ்வ்
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
'??????'
உண்மையான அழகு
“என்னங்க. . எங்கே இவ்வளவு ஆடம்பரமாகக் கிளம்பிட்டீங்க?’
”அழகிப் போட்டி நடக்குதில்லே. . .அதுலே நான்தான் ஜட்ஜ்!’
”அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
”எனக்கு எல்லாம் தெரியும்…
கனடாவுலே சமீபத்துலே ஓர் அழகிப் போட்டி நடந்துதே..அதைப் பத்தி உனக்குத்தெரியுமா?”
”என்ன அதுலே?”
”கண்ணு தெரியாத ஓர் ஆளை அந்த அழகிப் போட்டிக்கு ஜட்ஜா போட்டிருக்காங்க!”
”அது எப்படி?”
”அதை நடத்தினவங்களுக்கு ஓர் ஆசை… வித்தியாசமா அழகிப் போட்டியை நடத்தணூம்னு!
வெறும் முக அழகையும் , உடல் அழகையும் வச்சு மார்க் போடறதுக்குப் பதில் அவங்க
ஆளுமைப் பண்பு, மன அழகு இதையெல்லாம் பார்க்கணும்னு
நினைச்சாங்க!”
”எல்லா அழகிப் போட்டியிலும்தான் இதைப் பார்க்கிறார்களே!
நிறைய கேள்வியெல்லாம் கேட்டு மார்க் போடறாங்களே!”
”ஆனாலும் புற அழகுலே ஜட்ஜ் மயங்கி ஏமாந்துடப்புடாதுங்கறதுதான் இதுக்கு நோக்கம்!”
”அது ஒரு நல்ல ஏற்பாடுதான்!”
”இன்னிக்குக் கூட நான் கண்ணை மூடிக்கிட்டுதான் மார்க் போடப் போறேன்!”
”முழிச்சிக்கிட்டிருக்கறப்பவே உங்களுக்கு உண்மையான அழகுன்னா எதுன்னு தெரியாது!”
”உண்மையான அழகுன்னா எதுன்னு கண்டு பிடிக்கிற சாமார்த்தியம் எனக்கு இல்லேங்கறதை முப்பது வருசத்துக்கு
முன்னாடியே நான் புரிச்சிக்கிட்டேன்!”
”எப்போ…?”
”உன்னை பொண்ணு பார்க்க வந்தேனே..அப்போ!”
Monday, February 11, 2013
பச்ச மண்ணு
ஆசிரியர் தனது மாணவர்களிடம், யாரெல்லாம் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசைபடுறிங்கனு கேட்டார்....
எல்லா மாணவர்களும் கைய தூக்குனாங்க, ஒருவனை தவிர...
ஆசிரியர் அந்த மாணவனிடம் கேட்டார் எல்லாரும் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசை படுறாங்க உனக்கு மட்டும் ஆசை இல்லையா..
அதுக்கு அந்த மாணவன் சொன்னான்.
" எங்க அம்மா ஸ்கூல் விட்டதும் நேர வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லிருக்காங்க ."
அந்த பச்ச மண்ணு வேற யாரும் இல்ல, நான் தான்.
டெரர் பாய்
கன்டக்டர் : எங்க போகனும்?
.
.
.
.
டெரர் பாய் : அந்த பிங்க் கலர் சுடிதார் கிட்ட
கொஞ்சம் வழி விடுங்க!
ரொம்ப அறிவாளி இல்ல...???
ரொம்ப அறிவாளி இல்ல...???
---------------------------------------
அப்பா : என்னடா...? பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன் : என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..
அட்ஜஸ்ட்
வேலைக்குப் போகும் மனைவி,அன்று வீடு திரும்ப இரவில் தாமதமாகி விட்டது. மெதுவாகக் கதவைத் திறந்து, கணவன் தூங்கிக் கொண்டிருந்தால், அவரைத் தொந்தரவு செய்யாது தானும் கட்டிலில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி, மெதுவாக
படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு அதிர்ச்சி! கட்டிலில் போர்வையை முகம்வரை மூடி இரண்டு பேர் படுத்திருப்பது தேர்ந்தது. உடனே அவளுக்கு வந்ததே ஆத்திரம். பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அந்த இருவரையும் பலமாக நான்கு அடி அடித்துவிட்டு, கோபமாக
அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
அப்போது தான் அடுத்த அறையில் விளக்கு எறிவது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தால், கணவன் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். அவளைப் பார்த்தவுடன் கணவன் சொன்னான், '' இன்று மாலை ஊரிலிருந்து உன் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். மிகக் களைப்பாய் தென்பட்டதால் நான்தான் அவர்களை நம் படுக்கை அறையில் ஓய்வு எடுக்க சொன்னேன். நாம் இன்று ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.''.
பேருந்து பயணம்
"பேருந்து பயணம்"
ஜன்னல் ஓர
இருக்கை கிடைத்தும்
எத்தனை அழகுடன்
இயற்கை இருந்தும்
ரசிக்க முடிவதில்லை.
.
.
.
.
.
எண்ணமெல்லாம்
கண்டக்டர் தர
வேண்டிய
சில்லரை
பாக்கியிலே.
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
-----------------------
உனக்காக ஒருவன் ஓடினால் நீ நல்ல நண்பன்
உனக்காக 100 பேர் ஓடினால் நீ நல்ல முதலாளி
உனக்காக ஒரு ஊரே ஓடினால் நீ நல்ல தலைவன்....
வாழ்வதல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை..
உதாரணமாய் வாழ்வோம்.....
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். .
Sunday, February 10, 2013
நூதனமான திருட்டா இருக்கு
அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள், பார்க்கலாம், ''என்றொரு குறிப்பும் இருந்தது.
இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.
அதில், ''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது
அம்மா
""" நான் பார்க்க அசிங்கமா இருக்கானா ??? """
நண்பர்கள் : அதுல என்ன டவுட்,காட்டு குரங்கு மாதிரி இருக்க....
காதலி: சா சா அசிங்கமில்லை, லைட்ஆ சில சேன்சு பண்ணினா இன்னும் அழகா இருப்பாய்
அப்பா: ரொம்ப முக்கியம் போய் படிக்கிற வேலையைப் பாரு எருமைமாடு.....
அம்மா: எந்த குருட்டு நாய் சொன்னது, நீ ராஜா/ ராணி மாதிரி இருக்க, என் தங்கம் .....
இதுல இருந்து என்ன தெரியுது ????
(அம்மா எப்போவுமே தன் பிள்ளைய விட்டுக் குடுக்கமாட்டா)
காதலர்தினம்
காதலர்தினம்
-------------------
காதலர் தினத்துக்கு பட்டுபுடவை வாங்கி கொடுத்தேன் !!
அவள் கேட்டாள் , இது காஞ்சிபட்டா , கஸ்தூரிப்பட்டா ..!!
எப்படி சொல்லுவேன் அவளிடம் நான் வாங்கியது கடன் பட்டு என்று ???
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
-----------------------
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்..."
அதற்கு விவசாயி, "பானையே...! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா..? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்..."
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது...
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது...!
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க
ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!
6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க
மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே
இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )
9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
ட்ராபிக் போலிஸ்
ட்ராபிக் போலிஸ்: ஹலோ சார், நாங்க அரைமணி நேரமா உங்கள கவனிச்சுகிட்டே வர்ரோம். நீங்க சாலை விதிகளை மதிச்சு கரெக்டா வண்டி ஓட்டிட்டு வர்ரீங்க. சாலை பாதுகாப்பு வாரத்த முன்னிட்டு காவல்துறை சார்பா 10,000 ரூபாய் பரிசு இந்தாங்க
அய்யாசாமி : அப்பா இந்த பணத்த வச்சு எப்டியாவது ரைவிங் லைசன்ஸ் எடுத்துடனும்.
போலிஸ் முறைத்து பார்க்க.......
அய்யாசமியின் மனைவி அவசரமாக :
"சார் அவர் சொல்ரத கண்டுக்காதிங்க அவர் குடிச்சிட்டு ஔர்ராரு"
கோபமடைந்த போலிஸ் "மரியாதையா வண்டிய விட்டு கீழ இறங்குடா" என்றார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்து அய்யாசாமியின் காது கேட்காத அம்மா: "நான் அப்பவே சொன்னேன் திருட்டு வண்டிய எடுத்துட்டு வெளிய போக வேண்டான்னு. பாத்தியா இப்ப போலிஸ்ல மாட்டிக்கிட்டோம்" என்று சொல்ல
அய்யாசமியின் மைன்ட் வாய்ஸ் சொன்னது
"மாப்பு மாறி மாறி வைக்கிறாங்களே ஆப்பூ..
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?
------------------------------------------------------------
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார்.
சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள்.
சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது.
பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.
நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று.
WiFi
WiFi, ..... Wife
ரெண்டுக்கும் என்ன ஒத்துமனு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
பக்கத்து வீட்டுக் காரன் கிட்ட இருந்து ரொம்பக்
கவனமா பாதுகாக்கணும்!
Saturday, February 9, 2013
பேஷன்ட்
எப்போவும்
சார்ஜிலேயே
இருக்குற
என்
ஆண்ட்ராய்ட்
போன பார்த்தா,
ஆசுபத்திரில
குளுகோஸ்
ஏத்திட்டிருக்க
பேஷன்ட் மாதிரி
இருக்கு....
காளை மாடு
ஒருவருடைய
மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின்
இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை
கவனித்தார்.
துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி
வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை
அசைத்தார். ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ
சொல்கிறபோது
"இல்லை என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதி சடங்கெல்லாம் முடிந்த பிறகு
புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று
தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்?
என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து ஏன்
மனைவியைப் பற்றி நல்லவிதமாக சொல்வார்கள். எவ்வளவு அழகாய் இருந்தார்கள்,
அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம். என்று, அதற்கு ஆமாம் என்று நானும்
தலையசைப்பேன்.
சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று
தலையசைத்தீர்களே ஏன்? ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்கு தர
முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.
துளசியும் சுக்குக் கசாயமும்
இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.
ஒரு சமயம் மலையேறும் குழுவில் வந்தவர்கள் அவரிடம்.'சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!
தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'என்று கேட்டனர்.
''துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.
சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டார்.'சாப்பிடுகிறோம்.'என்றனர் வந்தவர்கள்
.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.
.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.
விடுதலை நாள்!!!!
திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன
ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?”
என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
Friday, February 8, 2013
தைரியம்
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
Wednesday, February 6, 2013
நல்லபேரு
Teacher: பிள்ளைகளே.....!!!!!! நீங்கலாம் நல்லா படிச்சி நம்ம ஊருக்கு நல்ல பேர் வாங்கித்தரனும்.
Girls: சரி மேடம்.
Boys : ஏன் மேடம் அக்கரைப்பற்று என்கிற பேரு நல்லாதானே இருக்கு???!!!
நம்ம பையனுங்க சிங்கமில்ல..
மருத்துவத்துறை மாணவர்கள்
கேள்வி :
காதல் என்பதால் நீர் யாது விளங்கிக் கொள்கிறீர்? விரிவாக விளக்கம் தருக.............. (10 marks)
விடை:
MBA மாணவர்கள்: காதல் என்பது வாழ்க்கை. ...
(புள்ளி 2/10)
பொறியியல் மாணவர்கள் : காதல் என்பது வலி. ... (புள்ளி 2/10)
மருத்துவத்துறை மாணவர்கள் :
- Definition:
ஆண், பெண் உறவு காரணமாக இதயத்தில் ஏற்படும் தீவிர தொழிற்பாட்டுக் கோளாறே காதல் எனப்படுகிறது.
மேலும் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் தடைகளின் உச்சத்தைப் பொறுத்து காதலானது ஒருவரினதோ, அல்லது இருவரினதுமோ இறப்பிற்குக் காரணமாக அமையலாம்.
- வகைகள்:
01. ஒருதலைக்காதல் (one sided)
02.இருதலைக்காதல் ( both sided)
- பாதிப்பிற்குள்ளாகும் வயது:
வழமையாக இளம் வயதினரிடையேயே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இன்று அனைத்து வயதினரிடையேயும் இது தன் தாக்கத்தைச் செலுத்டுகிறது.
- நோயறிகுறிகள்:
படபடப்பு (Tension)
பகல்கனவு (Daydreaming)
தூக்கமின்மை (Insomnia)
பசியின்மை (Loss of Apetite)
Phone Addiction
- எவ்வாறு நோய் தொற்றியுள்ளதை அடையாளம் காணலாம்:
நாட்குறிப்பேடு (Diary)
புகைப்படங்கள் (Photos)
Mobile
- சிகிச்சை:
Anti-LOVE therapy by Father's Shoe or
Mother's Sandals...
(புள்ளி 10/10) Excellent !
___________________________________________
குறிப்பு :- மருத்துவத்துறை மாணவர்களோடு விளையாட வேணாம்.
10 marks ற்காக அவர்கள் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க !
சிரிப்பூக்களின் குட்டிக்கதை:
சிரிப்பூக்களின் குட்டிக்கதை:
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
Sunday, February 3, 2013
வயது வந்தோருக்கான சிரிப்பூ
வயது வந்தோருக்கான சிரிப்பூ (நீங்கள் 16 வயதிற்கு குறைந்தவராயின் இந்த சிரிப்பூவை ரசிக்க வேண்டாம்)
-----------------------------------------------------------------
ஒரு புருஷனும் பொண்டாட்டியும் கடைத் தெருவுக்கு போனாங்க....
புருஷன் ஹெல்மெட் கடையில் ஹெல்மெட் வாங்கினான்.
மனைவி உங்களுக்கு தான் மண்டையிலே ஒண்ணுமே இல்லையே அப்புறம் எதுக்கு ஹெல்மெட்?
புருஷன் நேத்து நீ பிரா வாங்கும்போது நான் ஏதாவது சொன்னேனா
சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
உனக்கு நெனப்பு இருக்கா மச்சி அந்த நாள்...
.
.
.
.
.
பெப்ரவரி 4
.
.
.
.
நாம ரெண்டு பேரும் தேசிய கொடி வாங்க கடைக்குப் போனம்.
கடைகாரன் கொடி தந்த போது நீ கேட்ட கேள்வி...!!!!!
.
.
.
.
.
அங்கிள் வேற கலர் இருக்கா???????
சிரிக்காத வெக்கமா இல்ல உனக்கு?????
இன்று 65வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும்...
சிரிப்பூக்களின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
செவிடு போல
செவிடு போல
--------------------
ஒரு பொன்னுகிட்ட என்ன புடிச்சுருக்கானு கேட்டேன்,
உனக்கு அக்கா தங்கச்சி இல்லையானு கேக்குறா..!
#பாவம் அழகான பொண்ணு, ஆனா காது கேக்காது போல..!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இன்று தனது 65வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் சிரிப்பூக்களின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
கரெக்டர புரிஞ்சுக்கவே முடியல
Boy: வா சினிமா போவம்!!
Girl: வேணாம். நீ kiss பண்ணுவ?!
Boy: நான் பண்ண மாட்டன் வா...
Girl: என் இடுப்ப கிள்ளுவ..
Boy: நான் கிள்ள மாட்டன் வா...
Girl: என் கைய புடிப்பாய்
Boy: நான் புடிக்க மாட்டேண்டி..!!
Girl: அப்போ என்ன .................... க்கு டா சினிமாக்குக் கூப்புர்ற?
Boy ?.?.?
இந்த பொண்ணுங்களே இப்பிடித்தான்.... சத்தியராஜ் மாதிரி
இவங்க கரெக்டர புரிஞ்சுக்கவே முடியல
நூறு தந்திரங்கள்
நூறு தந்திரங்கள்
-------------------------------
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி
வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில்
ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத்
தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு
உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
Saturday, February 2, 2013
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
அதாவது தம்பி !
முதுகுக்கு பின்னாடி பேசுற டாக்ஸும்!
தோய்க்காம போடுற ஸாக்சும்!
மொதல்ல ஊற நாறடிக்கும் அப்புறம் உன்ன !!
மைண்ட் இட் !
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
அதாவது தம்பி !
முதுகுக்கு பின்னாடி பேசுற டாக்ஸும்!
தோய்க்காம போடுற ஸாக்சும்!
மொதல்ல ஊற நாறடிக்கும் அப்புறம் உன்ன !!
மைண்ட் இட் !
சிரிப்பு(த)த்துவம்
சிரிப்பு(த)த்துவம்
அதாவது தம்பி !
தம்மு பத்த வெக்குற கயிறும் !
பொராம புடிச்சவன் வயிறும் !
எரிஞ்சிக்கிட்டே தான் இருக்கும் !
என்ன பண்றது !
சிரிப்பூக்களின் தன்னம்பிக்கை கதை
சிரிப்பூக்களின் தன்னம்பிக்கை கதை
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.
சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது . எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.
''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!
யானையின் அடக்கம்.
யானையின் அடக்கம்.
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி:
தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
சிரிப்பூக்களின் நீதிக்கதை
ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.
அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.
இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.
அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.
பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.
ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.
நீதி :
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.
Friday, February 1, 2013
ஆபரேஷன்
என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேருந்து ஓடியாந்துட்டீங்க..?
இல்லே.. நர்ஸ் சொன்னாங்க..
இது சின்ன ஆபரேஷந்தான்.. டென்ஷன் ஆகாதீங்க..கடவுள் இருக்கார்.. அப்படின்னு..
சரி.. அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..
வாஸ்தவந்தான்....ஆனால் தைரியம் சொன்னது எனக்கு இல்லே.. டாக்டருக்கு..!
சிரிப்பூக்களின் இன்றைய பஞ்ச்
சிரிப்பூக்களின் இன்றைய பஞ்ச்
பழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும்,
படிச்சுட்டு போய் பிசினெஸ் பண்ண லோன் கேட்டவனுக்கும்,
மரியாதை கிடைச்சதா சரித்திரமே கிடையாது,,,!
Thursday, January 31, 2013
காதல்
பக்தகோடி : காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் சாமி????
பக்தா, காதல்ங்கறது பைக் ஓட்டுற மாதிரி
ஓட்ட புடிக்கலைனா எறங்கி நடந்தி போயிடலாம் ...
ஆனா,கல்யாணமுங்கறது கப்பல்ல போற மாதிரி
பிடிக்கலைனா கடல்ல இறங்கி நடக்கல்லாம் முடியாது
குதிச்சி சாகத்தான் முடியும்.
அய்யாசாமி.
தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம அய்யாசாமி.
"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"
"என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"
"அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"
"அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்"
Wednesday, January 30, 2013
மெண்ட்டல்
ஒரு மெண்ட்டல் ஹாஸ்ப்பிட்டலுக்கு நம்ம அய்யாசாமி வேற ஒரு வேலையா போயிருந்தார். திடீர்னு அவருக்கு ஒரு சந்தேகம். எப்படி பேசண்ட்டுகளை கரெக்ட்டா கண்டுபுடிச்சி அட்மிட் பண்றாங்கன்னு.
டாக்டர்கிட்ட கேட்டார்.
டாக்டர் : குளிக்கிற தண்ணி தொட்டில தண்ணிய புல் பண்ணி ஒரு ஸ்பூன், மக், பக்கெட் கொடுத்து தண்ணிய காலி பண்ண சொல்லுவோம்....
அய்யாசாமி : அப்போ நார்மலா இருக்கறவங்க பக்கெட் வெச்சி தண்ணிய அள்ளி ஊத்தி காலி பண்ணிடுவாங்க அதானே.......?
டாக்டர்: நோ... நோ.... நர்ஸ்....., அய்யாசாமிய உடனே அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க.....
அய்யாசாமி : அய்யய்யோ.... ஏன் டாக்டர்.......?
.
.
.
.
.
.
.
டாக்டர்: ஏன்னா நார்மலா இருக்கறவங்க தண்ணி தொட்டிய கீழே திறந்து விட்டு தண்ணிய காலி பண்ணுவாங்க.....
(என்ன உங்களையும் அட்மிட் பண்ணணுமா)
Tuesday, January 29, 2013
சிரிப்பூக்களின் தெளிவுக் கதை :
சிரிப்பூக்களின் தெளிவுக் கதை :
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது.
ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.
சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
நான் ரசித்த கவிதை
நான் ரசித்த கவிதை
யாரோ நினைத்தால் தும்மல் வரும் என்றால்
நீ எல்லாம் தும்மல் வந்தே செத்துருப்பாய் பெண்ணே..!!
விதியை மாற்றி அமை!!!
விதியை மாற்றி அமை!!!
------------------------------------
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார்.
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார்.
"எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார்.
அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது.
அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர்.
யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)