சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, January 31, 2013

InteRviEW


காதல்


பக்தகோடி : காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் சாமி????

பக்தா, காதல்ங்கறது பைக் ஓட்டுற மாதிரி
ஓட்ட புடிக்கலைனா எறங்கி நடந்தி போயிடலாம் ...

ஆனா,கல்யாணமுங்கறது கப்பல்ல போற மாதிரி
பிடிக்கலைனா கடல்ல இறங்கி நடக்கல்லாம் முடியாது

குதிச்சி சாகத்தான் முடியும்.

அய்யாசாமி.


தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம அய்யாசாமி.

"தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?"

"என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்"

"அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?"

"அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்"

Wednesday, January 30, 2013

மெண்ட்டல்


ஒரு மெண்ட்டல் ஹாஸ்ப்பிட்டலுக்கு நம்ம அய்யாசாமி வேற ஒரு வேலையா போயிருந்தார். திடீர்னு அவருக்கு ஒரு சந்தேகம். எப்படி பேசண்ட்டுகளை கரெக்ட்டா கண்டுபுடிச்சி அட்மிட் பண்றாங்கன்னு.

டாக்டர்கிட்ட கேட்டார்.

டாக்டர் : குளிக்கிற தண்ணி தொட்டில தண்ணிய புல் பண்ணி ஒரு ஸ்பூன், மக், பக்கெட் கொடுத்து தண்ணிய காலி பண்ண சொல்லுவோம்....

அய்யாசாமி : அப்போ நார்மலா இருக்கறவங்க பக்கெட் வெச்சி தண்ணிய அள்ளி ஊத்தி காலி பண்ணிடுவாங்க அதானே.......?

டாக்டர்: நோ... நோ.... நர்ஸ்....., அய்யாசாமிய உடனே அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க.....

அய்யாசாமி : அய்யய்யோ.... ஏன் டாக்டர்.......?
.
.
.
.
.
.
.
டாக்டர்: ஏன்னா நார்மலா இருக்கறவங்க தண்ணி தொட்டிய கீழே திறந்து விட்டு தண்ணிய காலி பண்ணுவாங்க.....
(என்ன உங்களையும் அட்மிட் பண்ணணுமா)


Tuesday, January 29, 2013

சைட் அடிப்போம், சந்தோசமா இருப்போம்


சிரிப்பூக்களின் தெளிவுக் கதை :


சிரிப்பூக்களின் தெளிவுக் கதை :

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது.
இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது.
ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.
சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

அப்பிடி போடு மச்சான் அருவாள


நான் ரசித்த கவிதை


நான் ரசித்த கவிதை


யாரோ நினைத்தால் தும்மல் வரும் என்றால்
நீ எல்லாம் தும்மல் வந்தே செத்துருப்பாய் பெண்ணே..!!

விதியை மாற்றி அமை!!!


விதியை மாற்றி அமை!!!
------------------------------------
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். 
 "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். 
ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். 
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார்.
 அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. 
அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். 
யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.

 நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

Sunday, January 27, 2013

ரொம்ப அறிவாளிடா



ஒரு மாதமாக கணவன், மனைவிக்கிடையே சண்டை. உடைகள் அங்கங்கே சிதறி வீடு குப்பைக்காடாக இருந்தது.

திடீரென ஒரு நாள் மனைவி எல்லாவற்றையும் சுத்தம் செய்து கணவனுடனும் அன்பாய் நடந்துகொண்டாள்.

இதைக் கவனித்த அவன் நண்பன் ...,
"என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்?" என்றான்.

"ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில், என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள்.
என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது."

NauGHtY




AMERICAN: yesterday i told 'I LOVE YOU' to one Tamil girl.

அய்யாசாமி : what she say?

AMERCAN(happily ­); she said"COME NAUGHTY WELCOME OUR PINCH ROOM"

அய்யாசாமி : அட லூசுப் பயலே அப்பிடியில்லடா....
 "கம்மனாட்டி வெளக்குமாறு பிஞ்சிரும் " எண்டுதாண்டா அவள் சொல்லியிருக்காள்

ஹி....ஹி.....ஹி...


கணவன்...
           ''..நீ ஆயிரத்தில் ஒருத்தி......!! ­!''

மனைவி.
    ''.யார் யார் அந்த மீதி 999 பேர்...சொல்றீங்களா இல்லையா..''

மேதைகளின் கிண்டல்.




ஒருமுறை ஐன்ஸ்டீன் பொழுதுபோக்காக வயலின் வாசித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரும்
ஐன்ஸ்டீனின் நண்பருமான மோல்நார் வந்திருந்தார்.

ஐன்ஸ்டீன் தப்பும் தவறுமாக வயலின் வாசிப்பதைப் பார்த்த மோல்நார்,
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

உடனே,

வயலின் வாசிப்பதை நிறுத்திவிட்டு ஐன்ஸ்டீன் மோல்நாரைப் பார்த்துக் கேட்டார்...

நான் வயலின் வாசிப்பதைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறீர்களே, நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப்
பார்த்து நான் எப்போதாவது சிரித்திருக்கிறேனா..?

சமயோசிதம்



அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன.
உடனே அவர்கள்......., ­
­ “பல நூற்றாண்டுகளுக்­­கு முன்னரே எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள்.” என அறிவித்தார்கள்,

ரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன.
உடனே அவர்கள் ......,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலே­­யே டெலிபோனை பயன்படுத்தியுள்­­ளார்கள்” என சொன்னார்கள்

நமது இலங்கையர்களும் தோண்டினார்கள்.
1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை.
உடனே அவர்கள் ......,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தை­ப் பயன்படுத்தியுள்­­ளார்கள்” என்று அறிவித்தார்கள்....!

Saturday, January 26, 2013

குட்டிக்கதை:



ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

சிரிப்பு(த)த்துவம்.




காதலியை அழ வைக்காதீர்கள் கண்ணீர் துடைக்க

பல ஆண்கள் காத்திருப்பார்கள்...

ஆப்பு


சிரிப்பு(த)த்துவம் (ஆரோக்கியம்)




அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”
அரசர் சார்பாக.., பீர்பால் அந்த சவாலை ஏற்றார்

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!

அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!

நியூட்டனின் 2nd LAW


Teacher : டேய் நியூட்டனின் ரெண்டாவது law வ சொல்லு.

student : complete ஆ வரது டீச்சர்.  கொஞ்சம்தான் தெரியும். சொல்லவா?

teacher : சரிடா...., தெரிஞ்சத சொல்லு..

student : " இதைதான் நியூட்டனின் 2nd LAW என அழைப்பார்கள்."..........: ­P :P

Friday, January 25, 2013

சிரிப்பு(த)த்துவம் (தலைக்கணம்)


சிரிப்பு(த)த்துவம் (தலைக்கணம்)

அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள்.
செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்றார்.
மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன்னார், “நான் யார் தெரியுமா..?”.

கடை ஊழியர் பணிவாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார். “நான் யார் தெரியுமா..? உறுமினார்.

மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்ததும் “நான் யார் தெரியுமா..?” என்றார்.

மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார். “தான் யார் என்று தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வரும் எல்லோரிடமும்
கேட்கிறார். அறிந்தவர் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்..!”

தன்னை மறப்பதே தலைக் கனத்தின் இலக்கணம்...!

கேனத்தனமான கேள்விகளும்......, கிறுக்கலான பதில்களும்.


கேனத்தனமான கேள்விகளும்......,
கிறுக்கலான பதில்களும்.

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை உள்ளால உடுப்பு கழுவ போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ இந்தியாக்கு ராக்கெட் விட நிக்கிறேன் :-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சத்தி வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-) ]

#கடுப்பேத்துறாங்க

யாரு பெத்த பிள்ளயோ

தம்பி ரொம்பதான் நஷ்டபட்டிருக்கு...

குடும்ப விசயம்


மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.

கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?

மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?

நமக்கிட்டயேவா


அமெரிக்கன் : இந்த துணி கிழியவே கிழியாது


ஜப்பானிஸ் : அடேயப்பா சூப்பர்!!!!

ஆப்ரிக்கன்: ஆச்சர்யமா இருக்கே....

நம்ம பய (இலங்கையன்): யோவ் யாருகிட்ட உண்ட வேலய காட்ற....?
 கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ??????


Thursday, January 24, 2013

ஃபேன்


ஒருவர்: நீங்க யாரோட ஃபேன்?

மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன்

ஒருவர் : உங்க மனைவி நடிகையா?

மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன்.

பாசம்


கணவன் :நம்ம‌ கருப்பு நாய் செத்து கிடக்கே.. நீ அதுக்கு ஏதாச்சும் சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை..

எப்பவும் நம்ம பையனுங்க Sharp


Boy : அங்க பாரு மச்சி super figure ஒன்னு போகுது..
Excuse me உங்க phone number கிடைக்குமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Girl : சீ...., போடா நாயே... உங்க வீட்ல அக்கா, தங்கச்சி..., அம்மாலாம் இல்லயா?

Boy : பாரு மச்சி அவசரத்த... அதுகுள்ள மாமியார், மச்சினிச்சி எல்லோரையும் பார்கனுமாம்.


சிரிப்பூக்களின் தத்துவம்


தம்பி என் அனுபவத்துல சொல்றன்..
.
.
.
.
.
 " டீ ல முக்கின பன்னும்,
  Facebook ல சிக்கின பொண்ணும்
  ரொம்ப நாள் நெலச்சதா சரித்திரமே இல்ல.


அன்பே! உன்னை கண்டதும் என் கோமனம் பறக்குதே


அன்பே! உன்னை கண்டதும் என் கோமனம் பறக்குதே

பாசக்காரி



Doctor: உங்க புருஷன் மண்டை ஒடஞ்சி இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்திங்க?
*
*
*
*
*
*
*
*
*
Wife: அடிச்சுக்கிட்டே இருந்தன் டாக்டர்.

Doctor: ?????

யாருக்கிட்ட.. நம்ம பையனுகள் சிங்கம் ல


Girl Friend : டேய்...., என் PURSE ய வீட்ல வச்சிட்டு வந்திட்டன்.  எனக்கு அவசரமா ஒரு 3000 Rs வேணும். தாரியா?
.
.
.
.
.
.
Boy : இந்தா 50 Rs. இத AUTO க்கு கொடுத்து வீட்ட போய் உன் PURSE ய எடுத்திட்டு வா.


Wednesday, January 23, 2013

எப்புடி நம்ம ஆளு



ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.''கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.

''அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?'என்று கேட்டார்.அவனோ,

''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'

எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,''என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.

புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,''என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.

''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.

புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்

அங்கு வந்தான்.வெற்றி அவனுக்குத்தான்.'

LKG Rocks


LKG BOy : டேய் மச்சி என் ஆளு உன் க்ளாஸுக்கு மாறிட்டா யாராச்சும் சைட் அடிச்சா என்ட சொல்லு

UKG BOY : அது எப்பிடிடா எல்கேஜில இருந்து யூகேஜிக்கு உடனே மாத்திட்டாங்க

LKG BOy : அவ டீச்சர்டா மச்சி

150

சிரிப்பூக்கள் இன்று தனது 150 வது வாசகரை தன்னிலே இணைத்துக் கொண்டது.
இதுவரை எமது சிரிப்பூக்கள் பக்கத்தை LIKE செய்து எங்களது வளர்ச்சிக்கு உதவிய அனைத்து வாசகர்களுக்கும் சிரிப்பூக்களின் இதய பூர்வ நன்றிகள்.

Tuesday, January 22, 2013

குடிமகன்


மனைவி : காரணம் இல்லாம குடிகமாட்டேன்னு சொன்னிங்களே இப்போ ஏன் குடிச்சிங்க???

கணவன் : ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேண்டும்னு பையன் கேட்டான் அதான்

மனைவி :??????

சிரிப்பூக்களின் தத்துவம்



நாம சின்ன புள்ளயா இருக்கிற நேரம் பென்சில USE பண்ணினம்....,
ஆனா இப்ப பென் USE பண்றம்...
.
ஏன் தெரியுமா?????
.
.
.
.
.
சின்ன பருவத்தில நாம பண்ற தப்புக்கள திருத்திக் கொள்ள ஏலும்.. ஆனா..., இப்ப ஏலாது இல்லயா..?!!!
so,  யோசிச்சு செய்ங்க...

வில்லங்கம்


கணவன் :  நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?

மனைவி : வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?

கணவன் :  வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!

1st CLASS


''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''

'அப்படியா சந்தோசம். அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'

'' வேறென்ன....செகண்ட் க்ளாஸ்தான்.''

சிரிப்பூக்களின் தத்துவம்



ஒரு குடிகாரன், ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார் ''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.

அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவன் வருவதையறிந்த ஞானி தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''
என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன்,

""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் '' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு என்றார் ...!

அந்த கனமே உணர்ந்த மனிதன் அக்குடியை தவிர்த்தான்.

லேட்.

ஆசிரியர்: ராதா, ஏன் இன்னிக்கு க்ளாசுக்கு லேட். 

ராதா: ஒரு பையன் என் பின்னாடியே வந்தான் சேர் 


ஆசிரியர்: அதுக்கு ஏன்... நீ..... லேட் ஆகணும். 


ராதா: சேர். அவன் கொஞ்சம் மெல்ல மெல்ல நடந்தான் சேர்.

Monday, January 21, 2013

சிரிப்பூக்களின் தத்துவம்


லய்பு


சிரிப்பூ


ரசிகர் : சிரிப்பூக்கள் நீங்க எவ்வளவோ ஜோக்ஸ் சொல்றீங்க.. ஆனா ஜோக்ஸ் எதுவுமே சிரிக்கிற மாதிரி இல்லையே..


சிரிப்பூக்கள் : ஜோக்ஸ் எப்படி சார் சிரிக்கும்?? நாம தான் சிரிக்கணும்.

ஓவியக் கண்காட்சி


பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.
ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.

மரியாத



அம்மா : ரமேஷ், அப்பாவை கூப்பிடு.
ரமேஷ் : அப்பா அப்பா இங்க வா..
அம்மா : அப்பாவை இப்படிக் கூப்பிடக்
கூடாது. மரியாதையா பேசணும். சரியா.
ரமேஷ் : அப்பா! மரியாதையா இங்க வா.

ரொம்ப நல்லா வருவடா


ஆசிரியர் : ஈயத்தை பார்த்து சிரிக்குதாம் பித்தளை ..இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..?

மாணவன் : பித்தளை சிரிக்கும் படியா ஈயம் ஏதோ ஜோக் அடிசிருக்குனு தெரியுது.


Jokes


Boy 1: நல்ல ஜோக்ஸ் இருந்தா அனுப்புடா மச்சான்

Boy 2: சொரிடா நான் இப்போ கொஞ்சம் BC, படிச்சிட்டு இருக்கன்.

Boy 1: ஹா..............ஹா............ஹா.................... நல்ல ஜோக்ஸ் மச்சான். இதே மாதிரி இன்னம் ஒரு 2, 3 அனுப்பன்

Sunday, January 20, 2013

மிச்சம்


ரயிலிருந்து இறங்கியவர் ஆட்டோ டிரைவரிடம்...

''இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் போகிறதுக்கு எவ்வளவு ஆகும்ப்பா...''
''எழுபது ரூபா ஆகும் சேர்..
''சரிப்பா...''          (நடக்கிறார்)
''அம்பது ரூபாய்..ன்னா வர்ரேன்.'
''அட ..டா.. குறைக்கல்லாம் வேணாம்..  பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து போனா எவ்வளவு மிச்சமாகும் பார்த்தேன்.

Saturday, January 19, 2013

குட்டிக்கதை:



ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே...! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

நீதி: தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்...!

சிரிப்பு(த)த்துவம்




பொண்டாட்டியும் மொபைலும்
ஒன்னுங்க....,
எப்பவும் கூடவே இருக்கும்...
இல்லீனா நிம்மதியா இருக்கும் ,,
ஆனா இல்லாம இருக்க முடியாது.

Friday, January 18, 2013

ரொம்ப அறிவாளிடா நீ


Ladies Radio


பெண் : நான் ஒரு ரேடியோ மாதிரி. எனது வாய்தான் ஸ்பீக்கர். எனது இடது மார்பகம்தான் டியூனர். வலது மார்பகம் வால்யூம் கண்ட்ரோல்.

ஆண் :  நான் ரேடியோவ ஒன் பண்ணட்டுமா...???  (என்று கேட்டவாறே....,  மார்பகங்கள் இரண்டையும் தொட்டுப் பார்க்கிறான்) சத்தமே வரலையே...

பெண் :  லூசு, முதல 'பிளக்'கை மாட்டுடா...!

வெளிநாட்டுக்காரன்


அய்யாசாமி : (தன் மனைவியிடம்) நான் வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கேன்?!

மனைவி : இல்ல…ஏன் கேட்கிறீங்க?

அய்யாசாமி : நான் லண்டன் போயிருந்தபோது ஒரு லண்டன் பெண் என்னைப் பார்த்து நீ வெளிநாட்டுக்காரனா அப்படினு கேட்டாள். அதான் உங்கிட்ட கேட்டன்

புத்தர் ஜெயந்தி


ஆசிரியர் : இன்று புத்தர் ஜெயந்தி. எல்லோரும் புத்தர் ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள் பார்க்கலாம்.

அய்யாசாமியின் பையன் எழுதினான் : புத்தர் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த தத்துவவாதி. வாழ்க்கையின் உண்மையை அறிந்து ஞானம் பெற்றவர். ஆனால் ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை அவருடைய காதலியாக இருக்குமோ?!.

ஆர் யூ ரிலாக்ஸிங்?


நம்ம அய்யாசாமி பாசிக்குடா பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு வெள்ளைக்காரப் பெண் வந்து கேட்கிறார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை.. நான் அய்யாசாமி"

அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை..நான் அய்யாசாமி."

அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த அய்யாசாமி, வெள்ளைக்கார நபர் ஒருவரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."

காதுகள் ஜிவ்வென ஆன நம்ம அய்யாசாமி கத்துகிறார் "அடே எரும... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே"

புரிஞ்சவங்க மட்டும்


Boy: நான் கொண்டொம் USE பண்ணியும் என் GIRL FRIEND,  PREGNANT ஆயிற்றா டாக்டர்.

Doctor: ஒரு கதை சொல்றன் கேளு...
ஒரு வேட்டைக்காரன் ஒரு நாள் gun க்கு பதிலா ஒரு குடைய கொண்டு போனான்.
திடீரென எங்கயோ இருந்து ஒரு சிங்கம் அவன் முன்னால வந்திச்சு
உடன அவன் குடையிண்ட கைப்பிடிய இழுத்து சிங்கத்த நோக்கி சுட்டான்.
சிங்கம் அந்த இடத்திலயே செத்து போய்ற்று.

Boy: Impossible.!!!!! CHANCE யே இல்ல.... வேற யாராச்சும் gun வச்சு shoot பண்ணியிருக்கலாம்தானே டொக்டர்.??

Doc: Exactly.... ;)

சிரிப்பு(த)த்துவம்



ஆம்பிளைக சண்டை போட்டா அதிக கெட்டவார்த்தைகளும்...

பொம்பளைக சண்டை போட்டா அதிக உண்மையும் வெளிவருகின்றன..!

இங்கிலிஸ் தெரியாது.


Boy : I love you,i want 2 share my life with you..!! :)

Girl : அண்ணா தமிழ சொல்லுங்க எனக்கு இங்கிலிஸ் தெரியாது.

Boy : ஒன்னும் இல்ல தங்கச்சி FOOD CITY க்கு எந்தப் பக்கமா போகனும் எண்டு கேட்டன்!!

Thursday, January 17, 2013

தங்கச்சி


Girl: Bike ல யாரு கூடடா போன?

Boy: தங்கச்சிடி

Girl: அப்புறம் எதுக்கு சோல போட்டு அவ முகத்த cover பண்ணி இருந்த?

Boy : உன்னோட தங்கச்சிடி!

girl : ?????!

வலி


டாக்டர்; அட்மிட் ஆன அன்னைக்கு வலியோடு அழுதீங்க…சரி.....குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிறப்பவும் ஏன் அழறீங்க ..?

Patient : இவ்ளோ அழகான நர்சுங்களையெல்லாம் பிரியணுமேங்கறதை நெனைச்சுதான்…!

அய்யாசாமியின் RESULT SHEET


நம்ம அய்யாசாமி அப்போ (O/L) படிச்சிட்டிருந்தாரு.

பெரிய ஹால்ல அரையாண்டு EXAM...

வழக்கம்போல பக்கத்துல இருந்தவனை பாத்து எழுதினதால supervisor கிட்ட மாட்டிகிட்டாரு....

Supervisor ஒண்ணுமே பேசல...
அவரோட Exam பேப்பரை வாங்கி, அய்யாசாமி எடுக்குற மொத்த Mark ல 5 மார்க்கை மைனஸ் பண்ணனும்னு எழுதி வச்சிட்டு போயிட்டாரு....

RESULT SHEET வந்திச்சி...

நம்ம தல வாங்குனது 3 மார்க்கு....

அதுலயிருந்து 5ஐ கழிச்சீங்கன்னா!!!!!?????

கவித

கோழியின் கரு கூட உணவு,
என் காதலியின் பரு கூட அழகு.
.
.
.

**... வெல்லவாயவில் ஆப்பாயில் சாப்பிடும்போது யோசிச்சது

Facebook காதல்


என்னடி, ராப்பிச்சைக்காரனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்காய்..?

FACEBOOKல என் COMMENTSக்கெல்லாம் அவன் LIKES போட்டுப் போட்டு, அது LOVE ஆ மாறிடுச்சு…!

அய்யாசாமியோட பசங்க


அய்யாசாமியோட பசங்க ரெண்டு பேர் ஒரே க்ளாஸ்ல படிச்சிட்டு இருந்தானுங்க.

மேடம் சொன்னாங்க எல்லாரும் அவங்க அவங்க அப்பா பெயர எழுதி கொண்டு வாங்கனு....

ஆனா இந்த ரெண்டு பேரும் வேற வேற பெயர எழுதி கொண்டு போய் காமிச்சானுகள்.....

மேடம் கேட்டாங்க ஏண்டா ரெண்டு பேருக்குமே ஒரே அப்பா தானே பின்ன எதுக்கு இப்படி எழுதிட்டு வந்திருக்கிங்கனு....

அதுக்கு நம்ம அய்யாசாமிட பசங்க என்ன சொன்னானுகள் தெரியுமா..........??

இவனுங்க காப்பியடிச்சு எழுதிருக்கானுங்க அப்படின்னு யாரும் சொல்லிடக்கூடாதுல மிஸ் ......
அதுக்குதான். 

Wednesday, January 16, 2013

விள‌ம்பர‌ம்

மனைவி தேவை என விளம்பரம் கொடுத்தான் ஒருவன்.

"என் மனைவியை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.

செ‌த்தாலு‌ம்


நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?
‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.
ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.
எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?
‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

சொ‌ர்க‌ம்-நரக‌ம்


கணவ‌ன் : கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் மேலெல்லாம் நம்பிக்கை ‌கிடையாது
மனை‌வி : இப்ப?
கணவ‌ன் : நரகத்தை‌த் தா‌ன் பார்த்துட்டே‌ன்.. சொ‌ர்க‌த்த இ‌னிமே தா‌ன் தேடணு‌ம்.

Boloogy, Sociology


நண்பன் 1: மச்சான் பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்னடா வித்தியாசம்?
.
.

நண்பன் 2 :  பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி.
அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.

பார்வை


கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு.. அதான்
.
.
.
.
நீங்க சாப்பிடறது கேரட் இல்லை.. முள்ளங்கி..!

புரிந்து கொள்


ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெண் SCOOTY ல் அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”
... என்று திரும்பி அவனைப்
பார்த்து திட்டிக் கொண்டே செல்கிறாள்.

திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது மோதி காயமடைந்து விடுகிறாள்.

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

முத்தம்


பாப்பா...........! என் செல்லக்கண்ணுல்ல! தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடும்மா......"

சிறுமி: " போங்க தாத்தா! பாட்டி பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்க"

புத்தி


உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே ஏன்?

கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு சொன்னேன். அதை அவன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டான்...

Tuesday, January 15, 2013

சிரிப்பு(த்)தத்துவம்


பொய்யான காதல் கோவிலுக்கு வெளிய  கழட்டி போட்ட ஷூ மாதிரி, சேருபவன் எடுத்து மாட்டிட்டு போவான்.

ஆனா உண்மையான காதல் கிழிஞ்ச சாக்ஸ் மாதிரி,
எவனும் எடுக்கவும் மாட்டான்,நாமளும் மாத்த மாட்டோம்.

விளம்பரம்



வயது வந்தோருக்கான நகைச்சுவை


அது ஒரு ஆபீஸ்.

அந்த நிறுவனத்தின் எம்.டியிடம் வேலை பார்த்து வந்த இளம் செக்ரட்டரி அன்றைக்குப் பார்த்து படு டைட்டான டிரஸ்ஸைப் போட்டு வந்திருந்தார்.

நடக்கும்போதும், உட்காரும்போதும் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு படு டைட்டாகவும், குட்டையாகவும் அது இருந்தது.

அதைப் பார்த்த எம்.டி. செக்ரட்டரியை தனது கேபினுக்குள் அழைத்தார். பின்னர் கதவை மூடினார். பிறகு செக்ரட்டரியிடம் அவரது உடையைக் காட்டி, உள்ளே இருப்பதை விற்கப் போகிறாயா என்று கேட்டார்.

அதைக் கேட்ட செக்ரட்டரிக்குக் கோபம் வந்து விட்டது. பாஸ், இதென்ன பேச்சு, கொஞ்சம் டீசன்ட்டா பேசுங்க என்றார்.

அப்போதும் கோபமடையாத பாஸ், அப்படியென்றால் அதை விளம்பரம் செய்வதை முதலில் நிறுத்து என்றார் கூலாக..


மாடி போர்ஷன்


மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?

என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!

டாக்டர், நோயாளி நகைச்சுவை


சரியாய் சாப்பிட முடியாம கஷ்டப்பட்டதால அந்த டாக்டர் கிட்டே ஆறு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்தியே இப்போ எப்படி இருக்கு ?

பசி வந்திடுச்சு - ஆனா இன்னிக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட இல்லாம கஷ்டபடறேண்டா ...

சின்ன வீடு


சிரிப்பூக்களின் சிந்தனை


மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

Monday, January 14, 2013

அன்புப் பரிசு


ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது
 " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்.. பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"
மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."

மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை என்கிறது வண்டி மாதிரிங்க

ஒரு சக்கரம் கணவன் னா,
மற்ற சக்கரம் மனைவிங்க..

இந்த ரெண்டில் எது பழுது பட்டாலும் வண்டி ஓடாது

.
.
.
.
.
.
.
..
.
.
நீதி :
மேலதிகமா இன்னொன்ன (ஸ்டெப்னி) வைத்துக்கொள்ளுங்கள்

பாசம்


ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

பிளவர் வாஸ்' இல்லையா ...???

புதிதாக திருமணம் செய்து கொண்ட அவன்,  தான் வேலை விட்டு வீட்டிற்கு வரும் போது தன் மனைவிக்காக  நிறைய ரோஜாப்பூக்களை வாங்கிக் கொண்டு வந்தி அதை தன் மனைவியிடம் நீட்டினான்.

அதைப் பார்த்த மனைவிக்கு தாங்க முடியாத சந்தோஷம். நேராக கணவனை பெட்ரூமுக்குக் கூட்டிக் கொண்டு சென்றாள். கதவைப் பூட்டினாள். படுக்கையில் விழுந்தாள். உடைகளை கழற்றினாள்.  கணவரைப் பார்த்து..

இது,
ரோஜாப் பூக்களுக்காக என்று கூறி அழைத்தாள்.

அதைப் பார்த்த கணவன் கேட்டான்...
ஏன் வீட்டில் 'பிளவர் வாஸ்' இல்லையா ...???

சொர்க்கம்


நீ எல்லாம் நல்லா வரணும்டா


அப்பா : உனக்கு தம்பி பாப்பா பிடிக்குமா? இல்ல தங்கச்சி பாப்பா பிடிக்குமா?

மகன் : எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் பிடிக்கும்....

Sunday, January 13, 2013

கணவன், மனைவி நகைச்சுவை


வரம்


கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்: !!!!

ஆசிரியர், மாணவன் jokes


ஆசிரியர் : சூரியன் மேற்கே மறையும்.  இது நிகழ்காலமா?, இறந்த காலமா?, எதிர்காலமா?

கடைசி பெஞ் மாணவன் : லூசு மவளே அது சாயங்காலம்

மாட்டுப் பொங்கல்


கணவன் : மாட்டுப் பொங்கலுக்கு என்னை ஏன் உங்க அப்பா கூப்பிடல?''

மனைவி : ''மாட்டு பொங்கலுக்கு எருமைய கூப்பிட்டு என்ன பண்ணப் போறாங்க?''

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

தைப்பொங்கலை கொண்டாடும் எமது வாசகர்கள் அனைவருக்கும் சிரிப்பூக்களின் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.



Saturday, January 12, 2013

பாரபட்சம்


செக்ரட்டரி : பாஸ் உங்க மேல நான் கேஸ் போடப் போறேன்...

பாஸ் : ஏன் , நான் என்ன தவறு செய்தேன்..

செக்ரட்டரி : இந்த ஆபீஸில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும் நீங்கள் செக்ஸ் ரீதியாக அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்வதாக கூறுகிறார்கள். அதற்காக பலர் வழக்கும் போட்டுள்ளனர். ஆனால் என்னை மட்டும் நீங்கள் இதுவரை தொந்தரவே செய்ததில்லை. ஏன் இந்த பாரபட்சம்... அதனால்தான் கேஸ் போடப் போறேன்.

(மக்கள் தொகை


ஆசிரியை : (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது)
இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

அய்யாசாமி : (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்.

புரிந்து கொண்டால் சிரிக்கலாம்.


புத்திசாலித்தனம்


எல்லாம் சரிதான், ஆனா 'வெயிட்' சரியில்லையே மச்சான்...!


அய்யாசாமி டவுனுக்குப் போயிருந்தான். அங்கு பஸ் ஸ்டாண்ட்டில் வைத்திருந்த எடை மெஷினைப் பார்த்தான். அதில் காசு போட்டான். ஒரு சீட்டு வந்தது. அதைப் பார்த்து செம குஷியாகி விட்டான்.

உடனே வந்த வேலையை முடித்துக் கொண்டு வேகமாக ஊருக்குத் திரும்பினான்.

வீட்டுக்கு வந்த அவன் மனைவியிடம், " இங்க பாரு, நான் வெயிட் பார்க்க மெஷினுக்குப் போனேன். அங்கு இந்த சீட்டில் எப்படி எழுதியிருக்கு பாரு" என்று சீட்டைக் காட்டினான்.

எப்படி எழுதியிருக்கு என்று கேட்டாள் மனைவி.

அதற்கு அய்யாசாமி, நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருப்பேனாம், படுக்கை அறையில் மனைவியை திருப்திப்படுத்தும் சக்தி எனக்கு நிறைய இருக்கிறது என்று சந்தோஷத்துடன் கூறினான்.

அதைக் கேட்ட மனைவி சொன்னாள், எல்லாம் சரிதான், ஆனால் உன்னோட வெயிட் தப்பா போட்டிருக்கே மச்சான்...

காதல்


Boy : I Love You

girl : I hate you

Boy : நல்லா யோசிச்சு சொல்லு

girl : sure I hate you

Boy : Waiter எனக்கு மட்டும் பில் போடு

girl : ஏய்...ஏய்... I Love You da

இப்பவாச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா!

அந்த சேல்ஸ்மேன் செம அப்செட்டாக இருந்தான். தனது வக்கீலைப் பார்க்கப் போனான். 

வக்கீலிடம், " சார், என்னோட மனைவி எனக்குத் துரோகம் செய்கிறாள் என்று நினைக்கிறேன்" என்றான்.

அதற்கு வக்கீல் "எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு அந்த சேல்ஸ்மேன் சொன்னான்...

"நான் சேல்ஸ் விஷயமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வெளியே போய் விடுவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டில் இருப்பேன். நானும் எனது மனைவியும் போன ஞாயிற்றுக்கிழமை படுக்கை அறையில் ரொம்ப மும்முரமாக இருந்தோம். சத்தமும் கொஞ்சம் ஜாஸ்திதான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி தனது வீட்டிலிருந்து வார இறுதி நாட்களாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக் கூடாதாப்பா என்று கேட்டாள்" என்றான்.

வாஸ்கொடகமா


Friday, January 11, 2013

தொடர்புகளுக்கு


முஹம்மது அபூபக்கர் ஹறூஸ்.


dr.haroos@gmail.com
0777679628

GigA NeT


Microsoft EXCEL

நம்ம அய்யாசாமி COMPUTER EXAM செய்ய போனாரு...

Examiner : அய்யாசாமி, Microsoft EXCEL என்றால் என்ன?
.
.
.
.
.
.
.
அய்யாசாமி : Well..., இது SURF EXCEL ன் இன்னொரு Brand. Computers ய கழுவ இத Use பண்ணுவாங்க

நோட்டீஸ் போர்டு

அது ஒரு தொழிற்சாலை. அங்கு பெண்கள் பணிபுரியும் பகுதியில் ஒரு நோட்டீஸ் போர்டு வைத்திருந்தனர். அதில் கூறப்பட்டிருந்ததாவது... 

பெண்களே, உங்களது ஸ்கர்ட் நீளமாக இருந்தால் மெஷின்களிடமிருந்து தள்ளியே இருங்கள். 

அதுவே உங்களது ஸ்கர்ட் மிகவும் குட்டையாக இருந்தால் மெக்கானிக்கல் என்ஜீனியர்களிடம் கவனமாக இருங்கள்...!!

ராத்திரி டிபன்

நேரமாகியும் வேலை விட்டு வீட்டுக்குத் திரும்பாத நம்ம அய்யாசாமி மீது கோபத்தில் இருக்கிறாள் அவள் மனைவி. அந்த நேரம் பார்த்து தொலைபேசி அழைக்கிறது.

அய்யாசாமி : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

அய்யாசாமி : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். எனக்காக காத்திருக்க வேணாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

கங்காரு


பீட்சா

நம்ம அய்யாசாமி ஹோட்டலுக்குப் போய், ஒரு பீட்சா ஆர்டர் செய்தார். சர்வர் அதைக் கொண்டு வந்து...

சர்வர் : ஆறு துண்டா வெட்டட்டுமா? அல்லது பன்னிரண்டு துண்டா வெட்டட்டுமா சார்?

அய்யாசாமி : ஆறு போதும். என்னால பன்னிரண்டு துண்டு சாப்பிடமுடியாது!

சர்வர் : !!!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...