சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, January 26, 2013

சிரிப்பு(த)த்துவம் (ஆரோக்கியம்)




அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”
அரசர் சார்பாக.., பீர்பால் அந்த சவாலை ஏற்றார்

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!

அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...