Wednesday, February 13, 2013
உண்மையான அழகு
“என்னங்க. . எங்கே இவ்வளவு ஆடம்பரமாகக் கிளம்பிட்டீங்க?’
”அழகிப் போட்டி நடக்குதில்லே. . .அதுலே நான்தான் ஜட்ஜ்!’
”அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
”எனக்கு எல்லாம் தெரியும்…
கனடாவுலே சமீபத்துலே ஓர் அழகிப் போட்டி நடந்துதே..அதைப் பத்தி உனக்குத்தெரியுமா?”
”என்ன அதுலே?”
”கண்ணு தெரியாத ஓர் ஆளை அந்த அழகிப் போட்டிக்கு ஜட்ஜா போட்டிருக்காங்க!”
”அது எப்படி?”
”அதை நடத்தினவங்களுக்கு ஓர் ஆசை… வித்தியாசமா அழகிப் போட்டியை நடத்தணூம்னு!
வெறும் முக அழகையும் , உடல் அழகையும் வச்சு மார்க் போடறதுக்குப் பதில் அவங்க
ஆளுமைப் பண்பு, மன அழகு இதையெல்லாம் பார்க்கணும்னு
நினைச்சாங்க!”
”எல்லா அழகிப் போட்டியிலும்தான் இதைப் பார்க்கிறார்களே!
நிறைய கேள்வியெல்லாம் கேட்டு மார்க் போடறாங்களே!”
”ஆனாலும் புற அழகுலே ஜட்ஜ் மயங்கி ஏமாந்துடப்புடாதுங்கறதுதான் இதுக்கு நோக்கம்!”
”அது ஒரு நல்ல ஏற்பாடுதான்!”
”இன்னிக்குக் கூட நான் கண்ணை மூடிக்கிட்டுதான் மார்க் போடப் போறேன்!”
”முழிச்சிக்கிட்டிருக்கறப்பவே உங்களுக்கு உண்மையான அழகுன்னா எதுன்னு தெரியாது!”
”உண்மையான அழகுன்னா எதுன்னு கண்டு பிடிக்கிற சாமார்த்தியம் எனக்கு இல்லேங்கறதை முப்பது வருசத்துக்கு
முன்னாடியே நான் புரிச்சிக்கிட்டேன்!”
”எப்போ…?”
”உன்னை பொண்ணு பார்க்க வந்தேனே..அப்போ!”
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment